இதனால் சென்னையில் இருந்து இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதுமட்டுமின்றி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணமும் கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட பலமடங்கு வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த விமான கட்டணம் அவர்களின் தலையை சுற்ற வைக்கும் வகையில் இருக்கிறது.
அதன்படி சாதாரண நாட்களில் சென்னை – தூத்துக்குடி இடையேயான விமான கட்டணம் ரூ.7,20 ஆக இருக்கும் நிலையில் இன்று விமான கட்டணம் ரூ.17,363 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை – மதுரை இடையே சாதாரண நாட்களில் ரூ.5,459 ஆக இருக்கும் விமான கட்டணம் இன்று ரூ.8,537 ஆக உயர்ந்துள்ளது.
